Super Star Rajinikanth Phone Call to Captain Vijayakanth
Super Star Rajinikanth Phone Call to Captain Vijayakanth

கேப்டன் விஜயகாந்துக்கு கு ராணா கேட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Super Star Rajinikanth Phone Call to Captain Vijayakanth : தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு லேசான அறிகுறிகளை மட்டுமே இருப்பதால் ஓரிரு நாளில் குணமடைந்து வீடு திரும்பி விடுவார் என அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை என்ன?? – தேமுதிக வெளியிட்ட அறிக்கை!

ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நடிகரும் இயக்குனருமான பாரதிராஜாவும் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி வாயிலாக கேப்டன் விஜயகாந்த்தை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.

விஜயகாந்த் தன்னுடைய உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.