Super Star Rajinikanth Latest Video

ரஜினி அரசியல் வேண்டாம் என முடிவு செய்ததற்கு இது தான் காரணம் என இணையத்தில் வெளியான வீடியோவால் ரசிகர்கள் கண்கலங்கி உள்ளனர்.

Super Star Rajinikanth Latest Video : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்தா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த ஜனவரி 15 முதல் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் உடல் நிலையில் ரத்த மாறுபாடு ஏற்பட்டு ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ளார். உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி அவரை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பினர்.

இதனை அடுத்து வரும் டிசம்பர் 31 ஆம் தேதி தன்னுடைய கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பேன் என்று கூறியிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரவில்லை என நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர்.சிலர் ரஜினி வீட்டின் முன்பு அமர்ந்து கண்ணீருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் ரஜினியின் இந்த முடிவை மொத்தமாக விமர்சனம் செய்யவும் தொடங்கினர்.

இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை முடியாமல் காரிலிருந்து இறங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.

இதனால் தான் இங்க அரசியல் வேண்டாம் என முடிவு செய்தீர்களா தலைவரே? எங்களுக்கு நீங்கள் நலமாக இருந்தால் போதும் என கண்ணீருடன் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.