சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Super Star Rajinikanth in Nelson Direction : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான அண்ணாதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இதனையடுத்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தான் அடுத்த படத்திலும் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது.

#ரைட்டர் படம் எப்படி இருக்கு? இது மக்கள் கருத்து! #writer public review

இந்திய தேர்வுக்குழு திறமையாய் கலந்துரையாட வேண்டும் : பாக். முன்னாள் கேப்டன் அப்ரிடி

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.