Super Star Rajinikanth Contribution to Producer Council
Super Star Rajinikanth Contribution to Producer Council

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாரி வழங்கும் வள்ளலாக தொடர்ந்து பலருக்கு உதவி செய்து வருகிறார்.

Super Star Rajinikanth Contribution to Producer Council : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

உயிரைக் காத்துக் கொள்வதற்காக பல குடும்பங்கள் உணவில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சினிமா துறையும் மொத்தமாக முடங்கி உள்ளதால் பல்லாயிரம் குடும்பங்கள் தவித்து வருகின்றன. இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் பெப்சி யூனியன், இயக்குனர்கள் சங்கம், நடிகர் சங்கம் என பலருக்கும் உதவி வருகின்றனர்.

ரியல் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்.. FEFSI ஊழியர்களுக்கு ரூ 50 லட்சம் உதவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெப்சி யூனியனுக்கு ரூபாய் 50 லட்சம் அளித்தது மட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர்கள் சங்கத்திற்கும் டன் கணக்கில் மளிகை பொருட்களை அனுப்பி இருந்தார்.

இதனையடுத்து 750 தயாரிப்பாளர்களை கொண்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் உதவுமாறு தயாரிப்பாளர் கே ராஜன் ரஜினிகாந்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிச்சயம் உதவுவதாகக் கூறி உள்ளார். அவருக்கு நன்றி கூறி தற்போது கே ராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் கொடுக்கும் பொருட்களை மே 3ஆம் தேதி தயாரிப்பாளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Super Star Rajinikanth Contribution to Producer Council
Super Star Rajinikanth Contribution to Producer Council