Super Star Rajinikanth Back to Chennai

அண்ணாத்த படத்தின் சூட்டிங் முடிவடைந்துள்ளதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.

Super Star Rajinikanth Back to Chennai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

கொரானா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையிலும் படத்தின் படப்பிடிப்புகளும் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். இதனையறிந்த ரசிகர்கள் அவரை பாதுகாப்பாக இருங்கள் தலைவா என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.