Super Singer Shivangi Childhood Photo
Super Singer Shivangi Childhood Photo

சூப்பர் சிங்கர் சிவாங்கி தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Super Singer Shivangi Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி களில் ஒன்று சூப்பர் சிங்கர். பல சிக்கல்களை கடந்து சென்றுகொண்டே இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் சிவாங்கி.

பேச்சு குழந்தை போல் இருந்தாலும் பாட்டு என வந்துவிட்டால் பட்டையை கிளப்பி விடுவார். மேலும் இவர் இனி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருந்தார்.

என்னால் அஜித்துக்கு அசிங்கமா? பல வருட ரகசியத்தை உடைத்த பிரசாந்த் – என்ன சொல்கிறார் தெரியுமா?

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பாட்டு பாடும் வீடியோ, புகைப்படம் என தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிறு வயதில் முறைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் பற்றிய பதிவில் நானும் ரவுடி தான் என குறிப்பிட்டுள்ளார்.

தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று விஜய் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த காதலுக்கு மரியாதை என்ற படத்தில் இருந்து என்னை தாலாட்ட வருவாளோ என்ற பாடலைப்பாடி வாழ்த்து கூறியுள்ளார்.

அதே போல் அப்பாக்கள் தினத்தில் தன்னுடைய அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.