சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் திருமணம் நடந்தது முடிந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் ஒன்பதாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா ஜெர்சன்.
இவர் சீசன் 9 போட்டியின் முதல் ரன்னராக 10 லட்சம் ரூபாய் பெற்றார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போதே சார்லி ஜாய் என்பவரை காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தற்போது கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிரியா ஜெர்ர்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.