சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூவையார் புதிய கார் ஒன்றை வாங்கி இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது திறமையை வெளிப்படுத்தி வரும் இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். அந்த வகையில் ஜூனியர் சூப்பர் சிங்கரில் தனது கானா பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து கப்பீஸ் என்று செல்ல பெயரையும் பெற்று பிரபலமான சிறுவன் தான் பூவையார்.

கார் வாங்கிய மகிழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பூவையார்!!… வெளியான புகைப்படம் வைரல்!.

இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஃபேவரிட் ஆன இவர் தளபதி விஜயின் பிகில், மாஸ்டர் படங்களில் விஜய்யுடன் நெருக்கமாக நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழின் உச்சத்தை தொட்டிருக்கிறார். தனது எட்டு வயது முதல் கானா பாடல்கள் பாடிவரும் அவர் தற்போது பல மேடை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என பிஸியாக இருந்து வருகிறார்.

கார் வாங்கிய மகிழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பூவையார்!!… வெளியான புகைப்படம் வைரல்!.

இந்நிலையில் பூவையார் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி இருப்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CjiYIsWP1mK/?igshid=YmMyMTA2M2Y=