
Senthil Ganesh & Rajalakshmi : டெல்டா மக்களுக்காக உதவ முன் வந்த சூப்பர் சிங்கர் பிரபலங்களான செந்தில் ராஜலட்சுமியை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்திருப்பது சமூக வளையதளங்களில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி.
இவர்கள் இருவரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்காக உதவ முன் வந்து அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.
இந்த வீடியோவை ராஜலக்ஷ்மி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலர் பாராட்டியுள்ளனர். ஒரு சிலர் 3 ருபாய் பிஸ்கட் பாக்கெட் என கலாய்த்தும் உள்ளனர்.
இப்படி கலாய்த்திருப்பவர்களை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி ஆகியோர் ஒன்றும் வசதியான கும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை.
நடுத்தர குடும்பத்தில் பிறந்து தற்போது தான் தங்களது திறமைகளால் வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் செய்வது சிறிய உதவி என்றாலும் அதனை பாராட்ட தான் வேண்டுமே தவிர இப்படி கலாய்ப்பது சரியில்லை என கூறி வருகின்றனர்.