வெள்ளி திரை பாடகராக அறிமுகமாகியுள்ள சூப்பர் சிங்கர் பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான “சூப்பர் சிங்கரில்” பாடகராக அறிமுகமாகி மக்கள் மனசை கவர்ந்தவர் தான் பரத். இவர் இரண்டு முறை அந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால் அவரால் பைனல்ஸ் வரை செல்ல முடிந்ததே தவிர வெற்றி பெற முடியவில்லை.

வெள்ளிதிரை பாடகராக அறிமுகமாகியுள்ளார் சூப்பர் சிங்கர் பரத்.. வைரலாகும் பதிவு.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து இருக்கும் நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி சீசன் 3” யில் புதிய கோமாளியாக பங்கேற்று இருந்தார். இதில் கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்ட பரத்தை பாடகர் என்பதை மறந்த ரசிகர்கள் இவரின் காமெடிகளுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.

வெள்ளிதிரை பாடகராக அறிமுகமாகியுள்ளார் சூப்பர் சிங்கர் பரத்.. வைரலாகும் பதிவு.

இந்நிலையில் தற்போது பரத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக வெள்ளித்திரையில் இருந்து வந்துள்ளது. “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” என்ற மிர்ச்சி சிவாவின் படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையில் உருவான “ஜோடி சேரலாம்” என்ற பாடலை பரத் பாடியுள்ளார். இதனை பரத் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.