Super Deluxe Trailer

Super Deluxe : விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் வசனங்களும் காப்பி தான் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களின் டீஸர் ட்ரைலர் உள்ளிட்டவை சர்ச்சைகளில் சிக்கி கொள்வது ஒரு ட்ரெண்டாகவே மாறி விட்டது.

படத்தின் போஸ்டரில் இருந்து டீஸர், ட்ரைலர், படங்கள் என அனைத்திலும் இது இந்த படத்தின் காபி அந்த படத்தின் காப்பி என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரும் பலிகடாவாகியுள்ளது.

ஆபாச பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் – ஒரே காட்சிக்கு 37 டேக்.!

ஆம், சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் புலியாவது பூனையாவது என இடம் பெற்றிருந்த வசனம் 1969-ல் வெளியான சாந்தி நிலையம் படத்தில் ஜெமினி கணேஷன் குழந்தைக்கு கதை சொல்லும் காட்சியில் கூறியிருப்பார்.

ஆனால் அது யானையை வைத்து கூறியிருப்பார். அதை அப்படியே பட்டி டிங்கரிங் செய்து புலி பூனை என மாற்றி சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் பயன்படுத்தியுள்ளனர்.

இதனை நெட்டிசன்கள் ஆதாரத்துடன் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.