Vijay Sethupathi, Samantha, Ramya Krishnan, Fahadh Faasil, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

Super Deluxe to gets Remake in Bollywood :

தியாகராஜா குமாரராஜா எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருந்த படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தைரியமான கதை, வித்தியாசமான திரைக்கதை என இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

பெருகும் வரவேற்பு, அதிகரிக்கப்பட்ட தியேட்டர்கள் – சுட்டு பிடிக்க உத்தரவு படத்திற்கு அடித்த ஜாக்பாட்.!

இந்நிலையில் இப்படம் அடுத்ததாக பாலிவுட்டில் ரீமேக் ஆகிறதாம். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடிக்க தியாகராஜா குமாரராஜாவே இப்படத்தை இந்தியிலும் இயக்குகிறாராம். மேலும் தயாரிப்பு நிறுவனம் உறுதியாகிவிட்டதாம்.

இதுதொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என்றும் மேலும் நடிகர்கள் யார்யார் என்பது போன்ற விவரங்கள் அப்போது தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்துக்கு அடுத்த ஆண்டு பல தேசிய விருதுகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.