Super Deluxe Secrets

Super Deluxe Secrets – சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் யார் யார் எவ்வளவு டேக் வாங்கினார்கள் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் தியாகராஜா குமார ராஜா. இவர் தற்போது சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

நேற்று ( மார்ச் 29 ) உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஸ்கின் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

படத்தில் சாதாரண நடிகர், நடிகைகள் முதல் துரும்பு வரை பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தது. அதற்காக ஒவ்வொருவரும் பல டேக்குகளை வாங்கி மெனக் கெட்டுள்ளனர்.

ஆம் ஒரு காட்சிக்கு ரம்யா கிருஷ்ணன் கிட்டத்தட்ட 37 டேக்குகளை வாங்கியுள்ளார். இவரை விட விஜய் சேதுபதி ஒரு படி மேல சென்று 80 டேக்குகள் வாங்கியுள்ளார்.

ஆனால் சமந்தா அதிகபட்சமாக 3 டேக்குகளை தான் வாங்கியுள்ளார்.

சமந்தாவின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் இரண்டு முன்னணி நடிகைகள் அதனை நிராகரித்துள்ளனர்.

அதே போல் ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் நடிக்க நதியா மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here