Super Deluxe Review

Super Deluxe Review : அசிங்கம், அவலம் இதையெல்லாம் போற்றுவது தான் தரமா? என்ற கேள்வியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தை மோசமாக விமர்சனம் செய்துள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் என்ற படத்தை இயக்கி இருந்தவர் தியாகராஜ குமாரராஜா. இந்த படத்திற்கு பிறகு தற்போது இவருடைய இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஆபாச நடிகையாக நடித்துள்ளார். மேலும் சமந்தா கள்ள தொடர்பு குறித்து வேடத்தில் நடித்துள்ளார்.

இருப்பினும் படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு அனைத்தும் மிகவும் எதார்த்தமாக சிறப்பாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜ் அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?… விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன். என்றும் Super deluxe…. தாங்க முடியலடா சாமி….ஏன்டா என்ன பிரச்சனை என்றும் விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.