Super Deluxe Movie
Super Deluxe Movie

Super Deluxe Movie : தியாகராஜா குமாரராஜா எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. தைரியமான கதை, வித்தியாசமான திரைக்கதை என இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மனைவியால் அது விஜய்க்கு மட்டும் தான் – பிரபல நடிகையின் விபரீத ஆசை.!

இந்நிலையில் வசூலிலும் இப்படம் அசத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது சென்னையில் மட்டுமே இரண்டாம் வார முடிவில் இப்படம் ரூ. 3.16 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இப்படத்தின் பொருளடக்கத்தை வைத்து பார்த்தால் இது மிகப்பெரிய வசூல் என்றே சொல்லப்படுகிறது.

அதேபோல் ஒரு ஏ சர்டிபிகேட் படத்துக்கு இவ்வளவு வசூல் வந்திருப்பது ஆச்சரியம் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்துக்கு அடுத்த ஆண்டு பல தேசிய விருதுகள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.