Super Deluxe Review

Super Deluxe Review : சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த சேரன் அந்த படத்தை பற்றிய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

ஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த தியாகராஜா குமாரராஜா 8 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை வாங்கி குவித்தது. அதே அளவிற்கு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வந்தது.

இந்நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான சேரன் சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்து விட்டு தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் வாழ்க்கை பற்றி சாமிபற்றி எது நல்லது எது கெட்டது யார் நல்லவர் யார் கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதை தான் படமும் கேட்கிறது.

தர்பார் பற்றி ட்வீட் போட்டு சிக்கி கொண்ட அட்லீ – விஜய் ரசிகர்கள் மிரட்டல்.!

உள்ளூர ஆயிரம் வக்கிரமங்களை அடக்கி வைத்திருக்கும் நம் முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச் சுற்றி ஓடவில்லை நம்முள் தான் ஓடுகிறது.

முதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டு வர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது.

தன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன்.. சல்யூட் விஜய்சேதுபதிக்கு. இன்னொரு சிவாஜி.

ஆபாச வார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ள முடியாத சினிமா தான் சூப்பர் டீலக்ஸ் காட்சி வடிவமைப்பு, ஒளிப்பதிவு,தேர்ந்தெடுத்த லொகேசன்கள் நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும் என இயக்குனரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது..

அடுத்த 5 வருடங்களில் இது போல சினிமாக்கள் அதிகம் வரும் என குறிப்பிட்டு படத்தை பாராட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.