Super Deluxe Mixing
Super Deluxe Mixing

Super Deluxe Mixing – சூப்பர் டீலக்ஸ் படத்தை பிரபல முன்னணி நடிகர் ஒருவர் நிராகரித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் தியாகராஜா குமாரராஜா. இந்த படத்தை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது.

படத்திற்கு பெரும்பாலான ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. விஜய் சேதுபதிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க தான் இயக்குனர் முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தை நிராகரித்துள்ளார்.

தற்போது படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் சிவா ரசிகர்கள் இப்படி மிஸ் பண்ணிடீங்களே என புலம்பி வருகின்றனர்.

Sivakarthikeyan
Sivakarthikeyan