கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக சன் டிவி நிறுவனம் ரூபாய் 30 கோடியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளது.

Suntv Contribute to CM Fund : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று இரண்டாவது அலை பெறும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்கிறது.

அதிரடி காட்டிய சன் டிவி.. கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 30 கோடி நிதியுதவி.!!

தமிழகத்திலும் இந்த வைரஸின் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பலரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சி நிறுவனம் ரூ 30 கோடியை கொரானா நிவாரண நிதியாக அளித்துள்ளது. இதனை சன் டிவி நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ‌