Sunny Leone
Sunny Leone

Sunny Leone : தொடர்ந்து பாலிவுட் படங்கள்ல நடிச்சிட்டு வந்த சன்னி லியோன கவனம் இப்போ முழுக்க முழுக்க தென்னக மொழி பக்கம் திரும்பியிருக்கு.

ஏற்கனவே தமிழ்ல ஜெய்யோட வடகறி படத்தில ஒரேயொரு பாடலுக்கு நடனமாடியிருந்த சன்னி லியோன், இப்போ வீரமாதேவிங்கற மெகா பட்ஜெட் படத்தில ராணியா நடிச்சிட்டு வர்றாங்க.

இது நடந்தால் இனி சினிமாவில் நடிப்பேன் – கமலின் அதிரடி பதில்

சௌகார்பேட்டை, பொட்டு படங்களோட இயக்குநர் வடிவுடையான் இயக்குற இந்த படம் சரித்திர கால படமா உருவாகிட்டு வருது.

இந்த படத்தோட படப்பிடிப்புல இயக்குநருக்கும் சன்னி லியோனுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டதால இப்போ மறுபடியும் இந்த கூட்டணி இன்னொரு தமிழ் படத்தில இணைஞ்சு பணியாற்ற திட்டமிட்டிருக்காங்க.

இப்போ தமிழ் சினிமாவில அரசியல் சீசன் டிரெண்டா இருக்க நிலையில இந்த கூட்டணி இணையுற படமும் ஒரு அரசியல் படமா உருவாகவிருக்காம்.

இதில சன்னி லியோன் தமிழகத்த சேர்ந்த ஒரு அரசியல் தலைவியாவும் நடிக்க இருக்காங்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.