காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார் நடிகை சன்னி லியோன்.

Sunny Leone in Sathish Movie : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சதீஸ். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர் தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் இயக்கும் ஒரு படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்க உள்ளார். இன்னொரு படத்தினை சிந்தனை செய் என்ற படத்தை இயக்கிய யுவன் இயக்குகிறார்.

சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் இணைந்த சன்னி லியோன் - இருக்கு வெறித்தனமான விருந்து.!!

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. படத்தில் சதிஷ்க்கு ஜோடியாக சஞ்சனா நடிக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய வெறித்தனமான விருந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சன்னி லியோன் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் வீரமாதேவி என்ற வரலாற்று திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.