Bigg Boss Tamil 5

பிக் பாஸ் சீசன் 5ல் முதல் ஆளாக குக் வித் கோமாளி பிரபலம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sunitha in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. அரசியல் களத்தில் தீவிரமாக இருப்பதால் ஐந்தாவது சீசனை அவர் தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என கூறப்பட்டு வருகிறது. அவருக்கு பதிலாக சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக நகுல் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அது முற்றிலும் வதந்தி என அவர் விளக்கம் அளித்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான அஸ்வின், சிவாங்கி, ஷகீலா, பாலா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தற்போது இந்த லிஸ்ட்டில் சுனிதா இணைந்துள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.