குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் இவரும் பங்கேற்க மாட்டார் என வெளியான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Sunitha in Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. முதல் சீசன் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனில் விட இரண்டாவது சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? 
 

அடப் போங்கய்யா குக் வித் கோமாளி 3-ல் இவரும் இல்லையா?? வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்

இதில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், பாலா, சிவாங்கி, சுனிதா, மணிமேகலை என அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் குக்காக பங்கேற்றவர்கள் தற்போது திரையுலகில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளனர்.

விரைவில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் பங்கேற்க போவதில்லை என தெரியவந்தது. காரணம் இருவருமே மிக பிஸியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி சுனிதாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் சுனிதாவை போட்டியாளராக கலந்திருக்க கலந்திருக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் கலக்கலான கோமாளி களில் ஒருவரான சுனிதாவும் சீசன் 3 இல் பங்கேற்க மாட்டார் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி