Sunil Shetty is Darbar’s Main villain :

தர்பார் படத்தின் வில்லன் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டிதான் இப்படத்தின் மெயின் வில்லனாம்.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் வில்லன் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டிதான் இப்படத்தின் மெயின் வில்லனாம்.

அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ!

தர்பார் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

அண்மையில் மும்பையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கும் படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இம்மாத இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.