Sunil Chhetri Asian Cup Win
Sunil Chhetri Asian Cup Win

Sunil Chhetri Asian Cup Win – 2019 AFC ஆசிய கோப்பை அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில், இந்தியா- தாய்லாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது.

34 வயது கொண்ட சுனில் சேத்ரி தான் இந்தியா ஆண்கள் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர். தாய்லாந்து உடனான போட்டியில் இவர் 2 கோல் அடித்தார்.

அதனால், சர்வதேச போட்டிகளில் தனது கோல் எண்ணிக்கையை 67-ஆக அதிகரித்து உள்ளார்.

இதனால், கால்பந்து உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியின் கோல் சாதனை முறியடித்துள்ளார்.

மேலும் தனது நாட்டிற்காக விளையாடி அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் சுனில் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளார்.

சுனில் சேத்ரியின் இந்த சாதனைக்கு AFC ஆசிய கோப்பை அமைப்பு, ட்விட்டரில் பாராட்டி உள்ளனர்.

104-வது போட்டியில் விளையாடிய சுனில் இந்த போட்டியின் முதல் கோலை அடித்தார்.

அதனை தொடர்ந்து 46-வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்தார். இது அவரின் 67-வது கோலாக அமைந்தது.