Sundeep Kishan Reply to Trolls

சுறா படத்தை மோசமாக விமர்சனம் செய்து சர்ச்சைக்குள்ளான சுதீப் கிஷன் ரசிகர்களின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Sundeep Kishan Reply to Trolls : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். பல தோல்விகளைச் சந்தித்த இவர் இன்று உச்ச நடிகராக உயரத்தை அடைந்து உள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி எதிர்பாராத அளவில் தோல்வியை தழுவிய திரைப்படம் சுறா.

இந்த படம் வெளியான பிறகு படத்தை மிகவும் மோசமாக விமர்சனம் செய்திருந்தார் நடிகர் சுதீப் கிஷன். தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் சுறா படம் பற்றி மோசமாக விமர்சனம் செய்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளுக்கு அவரை புகழ்ந்து தள்ளி வாழ்த்து தெரிவித்து வந்தார்.

ஆட்டுக்கறி போடாததால், ஆத்திரத்தில் வேறு பெண்ணை மணந்த மணமகன்..

இதனால் ரசிகர்கள் இவரை மோசமாக திட்டி தீர்த்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுதீப் கிஷன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Hotstar-ல் நேரடியாக வெளியாகும் SK-வின் Doctor படம்! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Sivakarthikeyan

இந்த பதிவு நான் சொன்னதில் தவறில்லை அதில் நான் உறுதியாக உள்ளேன். இந்த பதிவை சேகரித்து வைத்துக் கொண்டு எவ்வளவு நாள் கழித்து கேட்டாலும் அதில் நான் உறுதியாக இருப்பேன். விஜய் சார் எனக்கு பல வழிகளில் ஊக்கம் அளித்துள்ளார் என பேசியுள்ளார்.