Sundari Serial Gabriella Tested COVID19 Postive

பிரபல சன் டிவி சீரியல் நடிகை தனக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Sundari Serial Gabriella Tested COVID19 Postive : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் சாதாரண மக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் உள்ள பல நடிகர், நடிகைகள் இதனால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர். அதேபோல் திரையுலகில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் எழுத்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் நாயகியாக நடித்து வரும் கேப்ரில்லா தன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மக்களே உஷாராக இருங்க எனவும் எச்சரித்துள்ளார். இதனால் சுந்தரி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.