Sundari Heroine With AR Rahman

இந்தியாவின் புகழ் பெற்ற பிரபலம் சுந்தரி சீரியல் நாயகியுடன் எடுத்த செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Sundari Heroine With AR Rahman : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் டிக் டாக் பிரபலம் கேப்ரில்லா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கூட போட்டியாளராக பங்கேற்றார்‌. தற்போது ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ஒரு பாடலில் நடித்துள்ளார். இவர் மட்டுமல்லாமல் பூவையாரும் இந்த பாடலில் நடித்துள்ளார்.

இதனையடுத்து ஏ ஆர் ரகுமான் இவர்களுடன் தனித்தனியாக செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட இணையத்தில் தீயாக பரவி வருகிறது.