Sundari Gabriella Shocking Video

கொரானா பாதிப்பால் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா உயிருக்கு போராடுவதாக வெளியான வீடியோவிற்கு அவர் பதிலளித்துள்ளார்.

Sundari Gabriella Shocking Video : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா. டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் யூடியூப் சேனல் ஒன்று சுந்தரி சீரியல் நிறுத்தப்படுவதாகவும் கேப்ரில்லா உயிருக்கு போராடி வருவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அந்த நடிகையும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து கேப்ரியலா அந்த வீடியோவுக்கு பதில் அளித்துள்ளார். நான் நலமுடன் தான் உள்ளேன். உடல்நிலை சரியாகி கொண்டே இருக்கு என தெரிவித்துள்ளார்.