சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Sundari Gabriella As Heroine : சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா. டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஹீரோயினான சுந்தரி நாயகி கேப்ரில்லா - ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா??

மேலும் வெள்ளித்திரையில் ஐரா என்ற படத்தில் சிறுவயது நயன்தாராவாக நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து கேப்ரில்லா அடுத்ததாக N4 என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் லோகேஷ் இயக்குகிறார். படத்தில் நாயகனாக கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான மைக்கேல் நடிக்கிறார்.