சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத படங்களை இயக்கி வரும் இயக்குனர் சுந்தர்.சியின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர்தான் இயக்குனர் சுந்தர் சி. காமெடிக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் “காஃபி வித் காதல்”. இப்படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, மாளவிகா சர்மா உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை குஷ்பூ சுந்தர்.சி தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய தகவலாக இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி காஃபி வித் காதல் திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்ற அறிவிப்பை இப்படத்தை வழங்க இருக்கும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் twitter பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனால் சுந்தர் சி யின் ரசிகர்கள் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.