Sunaina Clarification About Marriage

நடிகருடன் விரைவில் திருமணம் என பரவிய தகவல் குறித்து சுனைனா விளக்கம் அளித்துள்ளார்.

Sunaina Clarification About Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சுனைனா. காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் இறுதியாக சில்லு கருப்பட்டி என்ற படத்தில் நடித்து மிகவும் பாராட்டுகளை பெற்றார்.

இந்த படத்தினை தொடர்ந்து ட்ரிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் நடிகர் கிருஷ்ணாவுக்கும் திருமணம் என தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சுனைனா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது தற்போதைக்கு தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை, பரவிய தகவல் வெறும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.