Sun TV Vs Vijay

Sun Tv Vs Vijay : சன் டிவி மட்டும் இல்லனா விஜய் அவ்வளவு தான்.. இவ்வளவு தூரம் எல்லாம் அவரால் வந்திருக்க முடியாது என ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருந்ததற்கு பிரபலம் ஒருவர் சரியான பதிலடியை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார்.

திரையுலகில் நுழைந்தது வேண்டுமானால் தன் அப்பாவின் மூலமாக இருக்கலாம். ஆனால் அவர் இந்த இடத்தை பிடித்திருப்பதற்கு அவரது விடாமுயற்சி மட்டும் தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நேற்று தளபதி 63 படத்தை சன் டிவி வாங்கிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை தொடந்து ரசிகர் ஒருவர் சன் டிவி இல்லனா விஜய் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என ட்வீட் செய்துள்ளார்.

அதற்கு ரோகினி தியேட்டர் உரிமையாளர் ரேவ்நாத் சரண் சாட்டிலைட் உரிமைக்கும் ப்ரோமோஷனுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

சன் டிவியின் எவ்வித பங்குமே இல்லமால் கத்தி திரைப்படம் மெகா ஹிட் பிளாக் பாஸ்டர் படமாகி இருந்தது நினைவில் இருக்கட்டும் என அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.