Sun TV Serials Dropped Details
Sun TV Serials Dropped Details

சன் டிவியில் ஒளிபரப்பான அழகு உள்ளிட்ட 4 சீரியல்கள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன இதற்கான காரணங்கள் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

Sun TV Serials Dropped Details : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்போடு சீரியல்களை நடத்துவது என்பது அரிதான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாண பரிசு, தமிழ் செல்வி மற்றும் சாக்லேட் ஆகிய சீரியல்கள் முழுமையாக கைவிடப்பட்டுள்ளன.

இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்த சீரியலில் நடித்து வருபவர்கள் சென்னை பெங்களூர் ஹைதராபாத் மும்பை என வெவ்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர்.

இவர்கள் ஷூட்டிங்கிற்கு வருவது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் இந்தக் கதாபாத்திரங்களை மாற்றியமைத்து உள்ளனர். ஆனால் அதுவும் முழுமையாக கைகொடுக்கவில்லை.

என் புருஷன் நான் வெஜ் சாப்பிட மாட்டார், டீ டோடலர்னு சொன்னிங்க.. இதுக்குப் பேர் என்ன? வாயை கொடுத்து வசமாக மாட்டிய வனிதா – வைரலாகும் வீடியோ

அதன் காரணமாக இந்த 4 சீரியல்களும் கைவிடப்பட்டுள்ளன. இந்த நான்கு சீரியல்களையும் ஒரே தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வந்தது.

தயாரிப்பு நிறுவனமும் சன் டிவி தொலைக்காட்சியும் ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு பதிலாக புதிய சீரியல்களை தொடங்க திட்டமிட்டுள்ளது.

புதிய சீரியல்கள் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அழகு சீரியல் ட்ராப் ஆனது குறித்து ஸ்ருதி ராஜ் வெளியிட்டிருந்த வீடியோ

https://www.instagram.com/tv/CCbJnBhhDcL/?igshid=hyclfph0n4op