
ஜனனியிடம் கதிர் சிக்க ரேணுகா நறுக்கென கேள்வி கேட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது அரசு அருணுக்கு போன் போட்டு எங்க இருக்க என கேட்க அருண் பிரண்ட பாக்க வந்திருப்பதாக சொன்ன அரசு உன் பிரண்ட் பெயர் என்ன என கேட்க அருண் வாய் தவறி சக்தி என உளறி விடுகிறார்.

அதன் பிறகு கதிர் ஜனனி ரூமுக்குள் சென்று அவரது போனை நோண்டி பார்க்க அப்போது ரேணுகா பார்த்துவிட்டு ஜனவரி ரூமுக்குள்ள என்ன பண்ற என்ன கேட்க ஜனனியும் அங்கு வந்துவிட நான் இல்லாத நேரம் பார்த்து என்னுடைய போனை நோண்டறீங்களே அசிங்கமா இல்லையா என கேட்டு அவமானப்படுத்துகிறார்.