தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ,உருவாகியுள்ள இந்த சீரியல் ஒரு அழகான கிராமத்து கதை கதைகளத்துடன் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அருமையாக அமைந்துள்ளது.
நேற்று ஒளிபரப்பாகிய இந்த சீரியலில், தலைமுறை தலைமுறையாக அய்யனார் கோவிலுக்கு குதிரை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார் ஹீரோயின் நந்தினி.
குதிரையுடன் நந்தினி வந்து இறங்க அனைவரும் கையெடுத்து கும்பிட்டு வணங்குகின்றனர். பூஜையை முடித்துவிட்டு அப்பாவுடன் கிளம்பிய நந்தினி, அப்பா கறி சாப்பிட ஆசைப்பட, கறி வாங்க சென்ற இடத்தில் தோழியை சந்திக்கிறார்.
அங்கு வந்த ஆடு ஒன்றைப் பார்த்து அந்த ஆட்டை பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். கடைக்காரர் ஏனென்று கேட்க அந்த ஆடு மாசமாக இருப்பதாக சொல்லி வாங்கிச் செல்கிறார்.
மறுபக்கம் அவரின் அப்பா கறிக்காக ஆசை ஆசையாய் மசாலா அரைத்துக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆட்டோடு வரும் நந்தினியை பார்த்து சகோதரிகள் இருவரும் சந்தோஷப்படுகின்றன. அம்மாச்சி எங்க என்று கேட்க நீ இல்லனா அவங்க எங்க இருப்பாங்க என்று சொல்கின்றனர்.
உடனே நந்தினி ஒரு வீட்டுக்குள் செல்ல அங்கு அம்மாச்சி ஜாலியாக பாட்டு கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அங்கே வந்த நந்தினி இது நம்மளோட ஓனர் வீடு அவங்க வரும்போது நம்ம வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளணும் எத்தனை வாட்டி சொன்னாலும் ஏன் உனக்கு புரியல என்று பாட்டியை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார்.
கறி இல்லை என்ற கோபத்தில் டீக்கடைக்கு சென்ற நந்தினியின் அப்பா டீக்கடைக்காரரை கலாய்க்கிறார். அந்த நேரம் பார்த்து துபாயிலிருந்து வருவதாக என்று கொடுக்கிறார் சிங்கப்பூர் தீபன். நந்தினியின் அப்பாவை மாமா என்று கூப்பிட்டு நந்தினி பற்றி விசாரிக்கிறார். நந்தினி வயலில் இருப்பதாக சொல்லுகிறார்.
வயலில் நந்தினி டிராக்டர் வைத்து ஏர் ஒட்டிக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து சிலர் நந்தினி கீழே பாரு என்று சொல்ல நந்தினி ஷாக்காகி வண்டியை நிறுத்துகிறார். அத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோவில், நம்ம சாப்பிடணும் என்பதற்காக அப்பா எத்தனை நாள் கஷ்டப்பட்டு இருக்காரு தெரியுமா என்று தங்கைகளிடம் சொல்கிறார்.
மறுபக்கம் அம்மாச்சி நந்தினி இடம் உங்க அம்மா போலவே இருக்க என்று சொல்ல, எல்லோரும் தூங்கும் நேரத்தில் தோட்டத்திற்கு தேங்காய் திருடுகின்றனர்.சத்தம் கேட்டு வந்த நந்தினி அவர்களை கண்டுபிடிப்பாரா? என்ன செய்யப் போகிறார் என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
கிராமத்து சூழலில் வாழும் ஒரு அழகான குடும்ப கதையை மையமாக வைத்து இந்த சீரியல் உருவாகி வருகிறது.