சன் டிவி சீரியல் நடிகை வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து இருப்பது புகைப்படம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

Sun TV Actress in Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என அனைவரும் டிரைலரை பார்த்து பிரமித்துப் போயுள்ளனர். அந்த அளவிற்கு எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது வலிமை ட்ரைலர்.

Daakko Daakko Meka (Telugu) Full Video Song |Pushpa Songs |Allu Arjun, Rashmika |DSP |Sivam |Sukumar

2021 மேட்சில், கடின உழைப்பும் ஒழுக்கமும் தேவைப்பட்டது : கே.எல்.ராகுல்

இந்த படத்தில் விஜய் டிவி புகழ் நடித்துள்ளார் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டியும் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவர் அஜித்துடன் நடித்த காட்சி டிரைலரில் இடம் பெற்றுள்ளது. தற்போது அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
Attachments area