Sun Pictures Upcoming Projects
Sun Pictures Upcoming Projects

விஜய் படத்தில் முன்னணி நடிகருடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைகோர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sun Pictures Upcoming Projects : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் என பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

OTT-ல் ஜகமே தந்திரம் ரிலீஸ்?? இத்தனை கோடிக்கு தான் விலை பேசியதா அமேசான்?? – தயாரிப்பாளரின் முடிவு என்ன?

இப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்துள்ளது. அதாவது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் வைத்து தரமான பக்கா கிராமத்து கதை ஒன்றை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாண்டிராஜ் கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார்.

இதனால் சூர்யா ரசிகர்களும் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.