Sun Pictures Upcoming Movies
Sun Pictures Upcoming Movies

பிக்சர்ஸ் நிறுவனம் அடித்தட்டு பிரபல நடிகர்களை வைத்து தொடர்நது படத்தை தயாரிக்க ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Sun Pictures Upcoming Movies : தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

ஆரம்பத்தில் நிறைய படங்களைத் தயாரித்த இந்நிறுவனம் கடந்த சில வருடங்களாக படத்தயாரிப்பில் ஈடுபடாமல இருந்து வந்த நிலையில் சர்கார் படத்தின் மூலமாக மீண்டும் தயாரிப்பில் இறங்கியது.

திடீரென நடந்த மாற்றம்.. லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ இவர் தான்!

இந்த படத்தை அடுத்து பேட்டை நம்ம வீட்டு பிள்ளை, காஞ்சனா 3 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறது.

மேலும் தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து விஜய் 65 படத்தை தயாரிக்க உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அரண்மனை3, சந்திரமுகி 2, தனுஷுடன் ஒரு படம் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என இதன் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இதற்காக மொத்தம் ரூபாய் 1000 கோடியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளன.

இந்த நடிகர்களில் யார் சன் பிக்சர்ஸுக்கு அதிக லாபத்தைக் கொடுக்க போவது? என்பதையெல்லாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.