Sun Pictures Upcoming Movies

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது. அவை எந்தெந்த நடிகர்களின் படங்கள் என்பதை பார்க்கலாம்.

Sun Pictures Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். பல ஹீரோக்களின் படங்களை தயாரித்த இந்த நிறுவனம் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களை தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

தளபதி விஜயின் சர்க்கார் திரைப்படத்தை தயாரித்து அதை தொடர்ந்து தற்போது அண்ணாத்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம தயாரிக்கிறது. தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள தனுஷ் 44 திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளது.

இவர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தல அஜித் ஆகியோரின் படங்களை தயாரிக்கவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.