Sun Pictures Tweet

Sun Pictures Tweet : விஸ்வாசம் மற்றும் பேட்ட ரிலீஸ் ஆவது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அனிருத் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அதிரடியான ட்வீட்களை பதிவிட்டுள்ளனர்.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ஆகிய படங்கள் பொங்கல் விருந்தாக நாளை ( ஜனவரி 10 )-ம் தேதி வெளியாக உள்ளது.

நடிப்பு ராட்சசி நயன்தாரா, ஆச்சரியப்பட்ட அஜித் – சிவா சொல்லும் விஸ்வாசம் சீக்ரெட்ஸ்.!

ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் சிறப்பு காட்சியாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது.

அஜித், ரஜினி வீட்டை சுற்றி அலப்பறை செய்த தல ரசிகர்கள் – போட்டோவை பாருங்க.!

அந்த டீவீட்டில் நாளை முதல் பேட்ட திரைப்படம் திரைக்கு வருகிறது என்பதை நினைவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அஜித் மற்றும் விஸ்வாசம் டீமிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

இந்த டீவீட்டை தொடர்ந்து அனிருத்தும் விஸ்வாசம் படம் வெற்றியடைய வாழ்த்துக்களை கூறி டீவீட்டியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.