Sun Pictures

Sun Pictures : தளபதி விஜயை தொடர்ந்து கிடுகிடுவென வளர்ந்த பிரபல நடிகருடன் இணைந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் இறங்கிய இந்த நிறுவனம் சூப்பர் ஸ்டாரை வைத்து பேட்ட விஜயை வைத்து சர்கார் என இரண்டு படங்களை தயாரித்துள்ளது.

இவர்களை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆம் சிவகார்த்திகேயனின் 16-வது படம் அதாவது SK 16 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தை பாண்டியராஜ் இயக்க இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து கேடி வில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தையும் மெரினா திரைப்படத்தையும் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களுக்கு பிறகு சிவா பாண்டிராஜ் கூட்டணி மூன்றாவது முறையாக அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.