
Sarkar Sun Pictures : சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்த படம் சர்க்கார்.
இந்த படத்தில் ஆளும் அதிமுக அரசு விமர்சிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் சர்கார் படத்திற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன.
இன்று சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் படத்தை எதிர்த்து அதிமுக தொண்டர்கள் போராட்டங்களில் இறங்கியிருந்தனர்.
தியேட்டர்களின் முன்பு வைக்கப்பட்டிருந்த சர்கார் படத்தின் பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் தளபதி விஜய், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யவும் வலியுறுத்தி வந்தனர்.
இது போன்ற தொடர்ச்சியான எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களால் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒப்புதல் அளித்திருப்பதாக பிரபல தியேட்டர் உரிமையாளரும் விநியோகிஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகளால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் காட்சிகளை நீக்க முடிவு செய்திருப்பது தளபதி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.