Sun Pictures Decision on Annathae

அண்ணாத்த ஷூட்டிங் குறித்து சிறுத்தை சிவாவுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது.

Sun Pictures Decision on Annathae : தமிழ் சினிமாவின் சிறுத்தை என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா. இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கினார்.

தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அண்ணாத்த என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியும் விஸ்வாசம் TRP சாதனையை முறியடிக்க முடியாத தெறி – தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் அஜித்.!!

இந்த படத்தில் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் குஷ்பு மீனா சதீஷ் சூரி என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைத்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.

ஆனால் பரவிவரும் கொரானா வைரஸ் பரவல் காரணமாக படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வைரஸின் பரவல் முழுமையாக நிறைவடைந்த பிறகு தான் சூட்டிங்கில் கலந்து கொள்வேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை சிறுத்தை சிவாவுக்கு அளித்துள்ளது.

அதாவது ரஜினி சார் வரும்போது வரட்டும் மற்ற நடிகர்களை வைத்து நீங்கள் ஷூட்டிங்கை தொடங்குங்க என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வெகு விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.