Sun Pictures Clarifications on Vijay65

தளபதி 65 படத்தில் சம்பள விவகாரம் குறித்து விஜய் எடுத்துள்ள முடிவு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Sun Pictures Clarifications on Vijay65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக வேண்டிய இப்படம் கொரானா ஊரடங்கு காரணமாக தள்ளிப் போய் வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும் மாஸ்டர் திரைப்படத்திற்காக ரூபாய் 80 கோடி சம்பளம் வாங்கிய விஜய் தளபதி 65 படத்திற்காக ரூபாய் 100 கோடி சம்பளம் கேட்பதாகவும் அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஹாட் பிரேக்கிங் : வலிமை படத்தின் சம்பள விவகாரத்தில் அஜித் எடுத்த அதிரடி முடிவு – தெளிவான மனுஷன்யா!

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சன் பிக்சர் நிறுவனம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு விஜயை அணுகியுள்ளது.

இதனையடுத்து நடிகர் விஜயும் ரூபாய் 20 கோடியை குறைத்து மாஸ்டர் படத்திற்கு வாங்கிய ரூபாய் 80 கோடியை சம்பளமாக கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் குறைத்துக் கொள்ளுமாறு கேட்க அதற்கு விஜய் தரப்பு மறுத்துள்ளது.

இதனால் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படம் கைவிடப்படவில்லை. ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என சன் பிக்சர்ஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.