Summer Tips
Summer Tips

Summer Tips :

🌞 கோடை காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றால் சருமத்தின் நிறமே மாறிவிடும்.

இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க இயற்கை முறையிலேயே வீட்டிலேயே என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

🌞 வெயிலில் அதிகம் சுற்றினால் சருமத்தில் ஒருவித கருமை ஏற்படும். அந்த கருமை போக்க கற்றாழை ஜெல்லில், தக்காளி சாறு கலந்து ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தின் கருமை நீங்கி, வெண்மை நிறம் அதிகரிக்கும்.

🌞 முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய கற்றாழை ஜெல்லில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து தினமும் முகத்தை கழுவ வேண்டும்.

🌞 கற்றாழை ஜெல்லுடன் தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.

🌞 கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவ சென்சிட்டிவான சருமத்தினருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.

🌞 தேன் மஞ்சள் தூள், பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி, நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் பொலிவான சருமத்தைப் பெறலாம்.

🌞 கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு மற்றும் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து வாரத்திற்கு இரண்டு முறை மாஸ்க் போட்டு வந்தால், வரட்சியான சருமம் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here