Health Tips
Health Tips

Health Tips : ☆ வேனல் கட்டி வரக் காரணங்கள்

கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து முகம் மற்றும் உடலில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன.

☆ வேனல் கட்டிக்கு நிவாரணம்:
▪ சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும்.

▪ கற்றாழை ஜெல்லை வேனல் கட்டி இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறையும்.

▪ மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும்.

▪ சந்தனத்தை உரசி எலுமிச்சை சாறினை சேர்த்து பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகும்.

▪ சோப்பை தூளாக்கி, மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்து வேனல் கட்டி இடத்தில தடவ வேனல் கட்டி மறையும்.

▪ வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் வேனல் கட்டி மறையும்.

▪ கடுகை அரைத்து வேனல் கட்டி இடத்தில போட்டால் வேனல் கட்டி மறையும்.

▪ வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து போடலாம்.

▪ சிறிதளவு சுண்ணாம்பை சிறிது தேன் விட்டு குழைத்து வேனல் கட்டி உள்ள இடத்தில் தடவி அதன் மேல் வெற்றிலையை ஒட்டி விட வேண்டும். வெகு விரைவில் வேனல் கட்டி குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here