Darbar
தர்பார் படத்தில் இருந்து ரஜினியின் சும்மா கிழி பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்க பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பொங்கல் 2020-ல் வெளியாக உள்ள இப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் டிராக் வீடியோ ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தற்போது சும்மா கிழி என்ற லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.