OTT-யில் நடிகர் கார்த்தியின் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sulthan Release in OTT : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். திரையரங்குகளில் வெளியாகி இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

OTT-யில் வெளியாகும் கார்த்தியின் படம் - எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!! ‌‌

இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படத்தினை எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருந்தார்.

இந்த படம் ஏப்ரல் 30-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.