சுல்தான் திரைப்படம் சூப்பரா சுமாரா என்ற விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Sulthan Movie Review : பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, லால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் இந்த சுல்தான்.

படத்தின் கதைக்களம் :

சூப்பரா? சுமாரா? கார்த்தியின் சுல்தான் விமர்சனம்.!!

பிறக்கும்போதே தாயை இழந்து பிறக்கும் கார்த்தி முரட்டுத்தனமான அடியாட்களின் கையில் வளர்கிறார். ஒரு கட்டத்தில் ரவுடிகளிடம் இருந்து பிரிந்து செல்ல ஆசைப்படுகிறார். இன்னொரு புறம் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் ஊர் மக்களை பாதுகாக்கவும் முயல்கிறார். இந்த இரண்டையும் அவர் எப்படி சமாளிக்கிறார்? ராஷ்மிகா மந்தனாவுடன் காதல் உருவாவது எப்படி என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

கார்த்தி ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதையும் சுமந்துள்ளார். ராஷ்மிகா மந்தனா அழகிய கிராமத்துப் பெண்ணாகவும் சிறப்பான நடிப்பால் நம்மை கவர்ந்துள்ளார்.

மலையாள நடிகரான லால் படம் முழுவதும் வலம் வரும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

இசை :

விவேக் மெர்வின் ஆகியோரின் இசை மற்றும் பாடல்கள் அற்புதம். யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் வேற லெவல்.

ஒளிப்பதிவு :

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. காட்சிகளை மிக அழகாகவும் தெளிவாகவும் படமாக்கியுள்ளார்.

இயக்கம் :

பாக்யராஜ் கண்ணன் தன்னுடைய பழைய படங்களைப் போலவே இந்த படத்தினையும் மிக அழகாக இயக்கியுள்ளார்‌. சில இடங்களில் மட்டும் தெலுங்கு வாசனை கொஞ்சம் தூக்கலாக உள்ளது.

தம்பஸ் அப் :

  1. கதைக்களம்
  2. கார்த்தி, லால், ராஷ்மிகா நடிப்பு
  3. யோகி பாபுவின் காமெடி

தம்ப்ஸ் டவுன் :

  1. சில இடங்களில் லாஜிக்கல் தவறுகள்