கார்த்தியின் அடுத்த பட ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கார்த்தியின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுல்த்தான் திரைப்படம் ரிலீசாக உள்ளது.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் தற்போது கசிந்துள்ளது.
அதாவது 2020-ன் கோடைகால ரிலீசாக இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதே கோடை விடுமுறையில் தான் அஜித்தின் வலிமை படத்தை வெளியிட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.